தெரியாமல் காலை மிதித்ததற்கு
தேடி வந்து மன்னிப்பு கேட்டால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!
கண் பார்வை இல்லாத ஒருவருக்கு
சாலையை கடக்க உதவினால் ஒருத்தி
கண்டதும்
பொங்கியது காதல் எனக்கு!
கூட்டத்தில் அழுத யாரோ குழந்தையை
அள்ளி எடுத்து நகைப்பூட்டினால் ஒருத்தி
கண்டதும்
பொங்கியது காதல் எனக்கு!
ஜீன்ஸ்சும் டீசர்டுமாய் பெண்கள் கூட்டம்
நடுவே தாவணியில் தெரிந்தால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!
கொட்டும் மழையில் ஊரே ஒதுங்கி நிற்க
கைகள் நனைத்து மழையை ரசித்தால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!
கொஞ்சம் வித்யாசமாய் எந்த பெண்
கண்ணில் பட்டாலும் மனதில் பொங்குது காதல்
இதற்கு பெயர் தான் கண்டதும் காதலா?
இல்லையே நான் தங்கத் தமிழணாச்சே
உள்ளம் பார்த்தல்லவா காதல் வர வேண்டும்
சற்று உரக்க யோசித்து ஒரு முடிவு செய்தேன்
இனிமேல் முடிந்தவரை அதிகமாய்
தமிழ் திரைப்படங்கள் பார்க்க கூடாது
எவ்வளவு மலிவாய் வருகிறது காதல்!
Tweet
13 comments:
உள்ளம் பார்த்தல்லவா காதல் வர வேண்டும்
உண்மை தானே :)
அருமையான கவிதை... ஒவ்வொரு பத்தியிலும் 'ல்' க்கு பதிலாக 'ள்' என மாற்றினால் சிறப்பு...
உங்களுக்கு நல்லாவே பொங்குது காதல்
நல்ல எழுத்து... மிகவும் ரசித்தேன்
@ prabhakaran
முடிந்தவரை "ல"கர பிரச்சினையை தீர்க்கிறேன் :)
@ சௌந்தர் & @ பார்வையாளன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமை
நன்றி LK
நல்லாத்தான் இருக்கு!!!!! அப்ப புது சரக்கு வந்தா இனிமே கடைப்பக்கம் வரலாம் போல தோணுது
கண்டிப்பா வாங்க
நல்லா இருக்கு!
நன்றி
// தமிழணாச்சே//
intha spellingku ippadithaan irukkum
Post a Comment