சினிமா நாத்திகன்


பூஜை புனஸ்காரங்களை நம்பாதவன்
கடவுள் வழிபாட்டை நம்பாதவன்
கடுவுளை நம்பாதவன்
சாதா நாத்திகன்!

கட் அவுட் பாலாபிசேகங்களை நம்பாதவன்
குத்து வசனங்களை நம்பாதவன்
மேக்கப் போட்ட நடிகர்களை நம்பாதவன்
சினிமா நாத்திகன்!

கடவுள் இருக்கிறார் என்றான்
தூண் துரும்பு அனைத்திலும் கடவுள் என்றான்
கடவுள் உனக்குள் இருக்கிறார் என்றான்
இப்போது நான் தான் கடவுள் என்கிறான்!

படம் நூறு நாட்கள் ஓடும் என்றான்
இது தானாய் சேர்ந்த கூட்டம் என்றான்
இப்போது எனக்காக உயிரை கொடுக்க
ஒரு கூட்டம் இருக்கிறது என்கிறான்!

கூட்டம் போட்ட எல்லா சாமியார்களும்
சந்தோசமாய் இருக்க முடியாது
கூட்டம் சேர்த்த எல்லா நடிகனாலும்
ஆட்சியை பிடிக்க முடியாது!

ஆன்மீகமாக இருந்தாலும் சரி
சினிமாவாக இருந்தாலும் சரி
வீணாய் போவது நம் பணம் தான்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

5 comments:

ஜெய்லானி said...

அட..நாத்திகனில் இத்தனை வகை இருக்கா..!!

philosophy prabhakaran said...

சினிமா நாத்திகன் - நல்ல கான்செப்ட்... அப்படின்னா நானும் சினிமா நாத்திகன் தான்...

சர்பத் said...

@ஜெய்லானி
இன்னும் ஏகப்பட்ட நாத்திகம் இருக்கு

@philosophy prabhakaran
அப்போ உங்க purse தப்பிச்சுது :)

பார்வையாளன் said...

அரசியல் நாத்திகன் என ஒரு பிரிவு இருக்கு ..அது இன்னும் மோசம்

சர்பத் said...

அரசியல் மோசம்னு சொல்ல வர்ரிங்களா இல்ல அரசியல் நாத்திகனா?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...