என்ன நீ இன்னும் எந்திரன் பார்கலியா?

"இந்த செமஸ்டர்ளையும் மேக்ஸ்ல பெயிலா?" ஆறு மாசத்துக்கு ஒருக்கா செமஸ்டர் ரிசல்ட் வரும்போது எங்கப்பா கேக்குற கேள்வி. இந்த கேள்வி அப்படியே என் காதுக்குள்ள போயி வயித்த ரீச் ஆகி அங்க இருந்து ஒரு எரிச்சல் கலந்த கோபம் கெளம்பி மேல வந்து கண்ணு வழியா ரிலீஸ் ஆகும். "மொன்ன ரோசதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல அடுத்த செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணுடா" சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு எங்கப்பா. எப்படியோ போராடி டிகிரி வாங்கி பல வருஷம் ஆச்சுன்னு வெய்ங்க.

எங்கப்பா கேக்குற அந்த கேள்விய தவிர வேற எந்த கேள்விக்கும் எனக்கு கோவம் வந்ததும் இல்ல வர்றதும் இல்லை. ஆனா அதை விட ரெண்டு மடங்கு கோபம் எனக்கு சமீபத்துல வந்துச்சு.  நண்பன் ஒருத்தன் நான் என்னவோ தேச துரோக குற்றம் செஞ்ச மாறி கேட்டான் "என்ன நீ இன்னும் எந்திரன் பார்கலியா?". அவன் கேட்ட விதம் எங்கப்பா கேக்குறத விட, சன் டிவில டிரைலர் போட்டு குடுக்கற டார்ச்சர விட கொடுமையா இருந்துச்சு. தொண்டை வரைக்கு வந்த ஒரு கெட்ட வார்த்தைய ரிட்டன் உள்ள அனுப்பீட்டு "இல்லடா இன்னும் பார்கல"ன்னு சொன்னேன். சனிக் கிழமை நான் பாட்டுக்கு எதாவது வார்த்தை பேசி, கடுப்பேத்திட்டடா வா சரக்கடிக்க போலாம்னு கூப்டுடான்னா... வேண்டாம்டா சாமி அடக்கியே வாசிப்போம்னு கமுக்கமாயிட்டேன். 

"இன்னைக்கு நைட்சோ போறேன் வர்றியாடா"ன்னு கேட்டான்... ஆஹா சனிக்கிழம ஏழரை விடாது போல இருக்குன்னு நெனச்சிட்டு, "டேய் நீ தான் ரிலீஸ் ஆன அன்னிக்கே முந்நூறு ரூபா குடுத்து பாத்தீலடா?"ன்னு நான் கேட்க, அவன் "இந்த மாறி ஒரு படம் இனிமே வருமான்னு தெரியல இந்த படத்த இன்னொரு தடவ தியேட்டர்ல பார்க்குறது தப்பே இல்லைடா. உனக்கும் சேர்த்து நானே டிக்கெட் எடுக்கறேன் போலாமா?"ன்னு கேட்டான்.

"டேய் நம்ம காலேஜ் படிக்கறப்போ புக்கு வாங்குனா காசு வீனா போகும்னு ஜெராக்ஸ் எடுத்து படிப்பியே அவனா நீ?"

"டேய் மச்சி படம் அந்த அளவுக்கு வொர்த்துடா... வர்றிய இல்லையா?"

"வரலன்னு சொன்னா விடவா போறே சரி போலாம்."

ஏற்கனவே இந்த படத்த தேவையான அளவுக்கு டிரைலர், விமர்சன பதிவுகள், படம் பாத்தவங்க சொன்ன கதைன்னு அலசிட்டதுனால அடுத்த படத்த தியேட்டர்ல பாத்துட்டு இந்த படத்த டிவில போடறப்போ பார்க்கலாம்னு இருந்தேன். ஒருத்தன் ஓசில டிக்கட் எடுத்து கூட்டிட்டு போறான் நமக்கு வேற முக்கியமான வேலையும் இல்ல... சரி போயி நம்ம மேல விழுந்த தேச துரோக கரைய போக்கிட்டு வரலாம்னு முடிவு செஞ்சேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க படம் இத்தன தியேட்டர்ல ஓடியும் கூட்டம் இன்னும் வருது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல சிறுசு பெருசு பொண்டு பொடுசுன்னு குடும்பத்தோட படம் பார்க்க மக்கள் வர்றாங்க. உள்ள போயாச்சு படமும் பாத்தாச்சு படம் நல்லா தான் இருந்துச்சு இன்னும் கொஞ்சம் நல்லா எடுதிருக்கலமோன்னு தோணுது...ம்ம்ம்ம் பதிவு எழுதறவன் என்ன வேணும்னாலும் எழுதலாம் பணம் போட்டு படம் எடுக்கரவனுக்கு தான் அதுல இருக்கற பிரச்சினை தெரியும். ஆனா வண்டி பார்கிங்ளையும் கான்டீன்ளையும் காச கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு நாலஞ்சு பேரு குடம்பத்தோட போயி படம் பார்க்கணும்னா கொறஞ்சது அறநூறு எழுநூறு ரூபாயாவது ஆகும். தப்புன்னு தெரிஞ்சும் மக்கள் ஏன் திருட்டு விசிடிய ஆதரிக்கராங்கன்னு இப்ப தான் புரியுது.

இது ரஜினி படம் மாறி இல்ல ஏன்னா கொஞ்சம் கூட மசாலாவோ அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்கோ இல்லை. சங்கர் படம் மாறியும் இல்ல ஏன்னா ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன் அளவுக்கு படம் பார்த்துட்டு வெளிய வரும்போது ஒரு வெயிட் இல்லை. தமிழ் சினிமாவோட கிராபிக்ஸ்சின் அடுத்த கட்டம்னு வேணும்னா சொல்லலாம். கிராபிக்ஸ ஒதுக்கி வெச்சுட்டு பார்த்தம்னா பெருசா ஒன்னும் இல்லை. நம்ம ரஹ்மான் குடுத்த வேலையா கம்மியாவும் போகாம எச்சாவும் போகாம கரெக்டா செஞ்சிருக்காரு. அயிசக்கா அழகா இருக்காங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல ஆனா அவங்க வயசு இப்போ முகத்துல தெரிய ஆரம்பிச்சிருச்சு.

பெரியவங்கள விட பொடுசுகளுக்கு இந்த படம் கண்டிப்பா அதிகமா புடிச்சு இருக்குங்கரதுல சந்தேகமே இல்ல. படத்துல ரத்தம் சொட்டுர வெட்டு குத்தோ, பி கிரேடு படத்துல வர்ற மாதிரியான காதல் காட்சிகளோ இல்ல, தைரியமா குடும்பத்தோட போயி காசு குடுத்து தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம் தான். என்ன சன் டிவி பண்ற ஓவர் பிரமோசன் என்ன மாறி நெறைய பேர கடுப்பு ஏத்தி இந்த படத்து மேல ஒரு ஈடுபாடு இல்லாம பண்ணிருச்சு. இது கண்டிப்பா சினிமாவ நல்லா கொண்டு போற வழி கெடயாது. 


7 comments:

philosophy prabhakaran said...

படம் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்கு னு சொல்லவே இல்லை... எனது இன்றைய பதிவினை வந்து படியுங்கள்... இன்னும் வெளியிடாததால் லிங்க் அனுப்ப முடியவில்லை... ஆனால் நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் நான் எனது பதிவினை வெளியிட்டிருப்பேன்...

சர்பத் said...

பிரபா அதான் சொல்லியாச்சே "தைரியமா குடும்பத்தோட போயி காசு குடுத்து தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம் தான்". அதுவும் இல்லாம நெறைய பேரு தேவைக்கு அதிகமாவே படத்த பத்தி அலாசு அலாசுன்னு அலசிட்டாங்க. நாம ஏன் மறுபடியும் அலசனும்? :)

உங்க பதிவையும் படிச்சாச்சு அருமை!

பார்வையாளன் said...

அருமையா சொன்னீங்க,,

Priya said...

//என்ன சன் டிவி பண்ற ஓவர் பிரமோசன் என்ன மாறி நெறைய பேர கடுப்பு ஏத்தி இந்த படத்து மேல ஒரு ஈடுபாடு இல்லாம பண்ணிருச்சு.//... எனக்கும் கூட அப்படிதான்!

சர்பத் said...

@பார்வையாளன்
நன்றி

@Priya
ஊர்ல முக்காவாசி பேருக்கு அப்படித்தான்

YOGA.S.Fr said...

padamum paravalla!ungka commendum paravalla!good,and correct comment!!!!!!!!!!

சர்பத் said...

Thanks YOGA!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...