சர்பத் - ஓர்அறிமுகம்பெயர்க் காரணம் 
இது ஒன்னும் ஏழு மாசமா யோசிச்சு வச்ச பேரு இல்ல, வேற பேரே கெடைக்காம வெச்சது. நானும் ஏகப்பட்ட பேரு முயற்சி பண்ணி பாத்து ஒண்ணுமே கெடைக்காம வெச்ச பேரு தான் சர்பத்! அடங்கொக்கமக்கா எனக்கு புடிச்ச எல்லா பேரையும் பதிவு பண்ணிட்டாங்க ஆனா ஒருத்தனும் அதுல பதிவே போடறது இல்ல... சரி அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. 

பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணினதுக்கு அப்புறம் பெரும் பிரச்சினையே இந்த பேரு முடிவு பண்றது தான். நமக்கு புடிச்ச பேருல யாராவது ஏற்கனவே எழுதிட்டு இருகாங்க அப்படி இல்லன பதிவு மட்டும் பண்ணி வெச்சுட்டு பொழப்ப பாக்க போயர்றாங்க. ஒரு நல்ல எளிமையான சுருக்கமான பேரு வைக்கனும்னு முடிவு பண்ணப்ப தான் இந்த "சர்பத்" டக்குனு ஞாபகம் வந்துச்சு. ஒரு டம்ளர் தண்ணி, 2 கரண்டி சர்க்கரை, பாதி எழுமிச்சம்பழம் யாரு வேணும்ன்னாலும் சுலபமா சர்பத் போற்றலாம் பெரிய வித்தையே இல்ல. நான் பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணினதும் அந்த மாறி தான் சுலபமான உள்ளூர் தமிழ்ல எளிமையா எனக்கு தெரிஞ்சதையும் தெரிஞ்சிக்கிட்டத்தையும் எழுதனும்னு நெனச்சேன், அது தான் இந்த சர்பத்!

நான் யார்?
என்னை பொறுத்த வரைக்கும் எழுத்துக்கு முகமோ பெயரோ தேவை இல்லை. நம்ம வானொலி கேக்கறோம் பேசறவங்க குரல் நல்லா இருக்கு, அவங்க பேர சொன்ன தெரிஞ்சிக்கறோம் இல்லேன்னா குரலை ரசிச்சிட்டு அடுத்து வர்ற பாட்ட கேட்டுட்டு போயர்றோம் 99 % வானொலி தொகுப்பாளர்களோட முகம் மக்களுக்கு தெரியறதே இல்ல குரல் நல்லா இருந்தா ரசிக்கிறோம் அவ்ளோதான். 

சில சமயத்துல நம்ம பெயரும் முகமும் நம்ம படைப்புகளுக்கு ஒரு அடையாளம் கொடுத்துருது. எப்பவுமே ஒரு படைப்புதான் என்ன பொறுத்த வரைக்கும் படைப்பாளிக்கு அடையாளம் கொடுக்கணும்.

சரி நான் யாரா இருந்தா என்ன கண்ணு... கருத்து மனசுக்கு புடிச்சிருந்த கவ்வீட்டு போக வேண்டியது தான...

பதிவெழுத காரணம்?
எல்லா மனுசனுக்கும் ஒரு வலைப்பக்கம் தொடங்கனும்னு ஆசை இருக்கும் அதுவும் குறிப்பா இனைய தளம் சார்ந்த வேலைல இருக்கறவங்களுக்கும், தினமும் இனைய தளத்தை உபயோகிகரவங்களுக்கும் கண்டிப்பா இருக்கும். ரொம்ப நாளா, சொல்லபோனா ரொம்ப வருசமா ஆரம்பிக்கணும்னு நெனச்சு இப்ப தான் முயற்சி கைகூடி இருக்கு. 

நல்லவன் ஆகுறது கஷ்டம் இல்ல ஆனா நல்லவனாவே இருக்கறது தான் கஷ்டம். பதிவு எழுதலாம்னு முடிவு பண்றது கஷ்டமா இல்ல ஆனா தொடர்ந்து எழுதறது தான் கஷ்டம், அட மறந்துட்டேன் பாருங்க நல்ல பேரு வைக்கறது ரெம்ப ரெம்ப கஷ்டம்!!

தொடர்ந்து எழுதுவேன்னு நெனைக்கிறேன் பார்போம் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

9 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் உங்களால் இயலும் எதிர்பார்புடன் காத்திருக்கிறேன் . மீண்டும் வருவான் இந்த பனித்துளி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

LK said...

தொடருங்கள்..

Sarbath said...

@பனித்துளி சங்கர்
நன்றி நண்பரே.. setting modified.

@LK
நன்றி நண்பரே

எம் அப்துல் காதர் said...

// நம்ம வானொலி கேக்கறோம் பேசறவங்க குரல் நல்லா இருக்கு, அவங்க பேர சொன்ன தெரிஞ்சிக்கறோம் தொகுப்பாளர்களோட முகம் மக்களுக்கு தெரியறதே இல்ல குரல் நல்லா இருந்தா ரசிக்கிறோம் அவ்ளோதான். //

// எப்பவுமே ஒரு படைப்புதான் என்ன பொறுத்த வரைக்கும் படைப்பாளிக்கு அடையாளம் கொடுக்கணும். //

மேற்படி ரெண்டு உதாரணங்களுமே உங்களை அடையாளம் காட்டுது. தொடர்ந்து எழுதுங்க பாஸ். வாழ்த்துகள்!

Sarbath said...

நன்றி :)

Anonymous said...

Kadhal Vandhal, Robo vukkum Sanguthaan..

cartoonist madanaya minjiteenga

சர்பத் said...

@ cartoonist madanaya minjiteenga

ஏங்க இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிலையா?

அங்கிதா வர்மா said...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். சர்பத் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், உண்மையான சர்பத்தை சொன்னேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...