சந்திராயனும் உள்ளூர் கிழவியும்நிலவில் நீர் சந்திராயன் கண்டுபிடிப்பு சத்தமாய் பேப்பர் படித்தவனிடம் அப்பாவியாய் கேட்டது உள்ளூர் கிழவி "அப்போ நம்மூருக்கு சீக்கிரம் நல்ல தண்ணி பைப்பு வந்திருமா கண்ணு?"

உனக்கு இதே வேலையா போச்சு கெழவி போன வாரம் நதிகளை இணைக்குராங்கன்னு படிச்சப்பவும் இதே கேள்விய தான் கேட்ட இப்பவும் அதே கேள்விய கேக்குற போ கெழவி போயி வேலைய பாரு.

என்னமோ போ கண்ணு வெள்ளக்காரன் இருக்கறப்பவே வந்திரும்னு சொன்னங்க அதுக்கப்புறம் யார் யாரோ வந்துட்டு போயாச்சு, எனக்கு கொள்ளு பேரனும் வந்தாச்சு நல்ல தண்ணி பைப்பு இன்னும் வரல!

டெக்னாலஜி என்னமா வளந்திருக்கு இன்னும் பைப்பு வரல பருப்பு வரலைன்னு...அண்ணே ஒரு டீ ஒரு கிங்க்ஸ் அப்படியே ஒரு பாண் பராக் எவ்வளவு ஆச்சு? கேட்டுவிட்டு சில்லறையை துளவினான் இன்றைய இளைஞன்!
No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...