எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?

என்ன தான் ஆபீஸ் முடியற டைம் ஏழு மணினாலும் எல்லா ஒட்டு போடற வேலையும் முடிச்சு வெள்ளகாரனக்கு வெளக்கம் சொல்லிட்டு வெளிய வந்து மணிய பாத்தம்னா கொறஞ்சது ஒம்போது ஆகியிருக்கும். எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை என்னைக்காவது ஒரு நாள் சாயங்கால வெளிச்சத்துல வீட்ட பாத்துரனும்கறது தான். சரி அத விடுங்க நம்ம நேரா விசயத்துக்கு வருவோம். ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் சித்த நேரம் டிவிய பாத்து நம்ம சித்தத்த தெளிய வெப்போம்னு ரிமோட்ட கைல எடுத்தோம்னா அப்ப தான் அந்த கேள்வி உதயம் ஆகும் "எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?".

நம்ம டிவி பாக்குற நேரமே ஒன்பது மணியில இருந்து பத்தர பதினோரு மணி வரைக்கும் தான். அப்படியே ஒவ்வொரு சேனலா மாத்துவோம் வாங்க... மொதல்ல நியூஸ் சேனல்...தமிழ்ல நமக்கு தெரிஞ்ச ஒரே நியூஸ் சேனல் சன் நியூஸ் தான் அதுல வெட்டு, குத்து, கொலை, உல்லூர் சண்டை, விபத்துன்னு ஒரே கலவரமா இருக்கும். முடியலைடா சாமி எதாவது காமெடி பார்க்கலாம்னு ஆதித்யா சேனல் பக்கம் போனா ஊஊன்னு வடிவேலு ஊளை உட்டுட்டு இருப்பாரு இல்லேன்னா நாராசமா விவேக் ஒரு மொக்கைய போட்டுட்டு இருப்பாரு அதுவும் போட்ட காமெடி சீனே திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கும். சரி பாட்டாவது கேப்போம்னு சன் மியுசிக் போட்டோம்னா பத்து மணிக்கு அதுலயும் காமெடி தான் ஓடிட்டு இருக்கும்.

சன், விஜய், ஜெயான்னு எல்லா சேனல்லையும் நிஜம், நடந்தது என்ன, மர்மம், மண்ணாங்கட்டின்னு ஏதோ ஒரு பேர்ல இந்த வீட்ல பேய் இருக்கு, கள்ளக் காதல், கொலை, மரத்துல பால் வடியுது, சரக்கு போட்டு குறி சொல்லும் சாமியார்னு ஒரே கலீஜா இருக்கும். சரி இப்ப தான் டிஸ்கவரி சேனல் தமிழ்ல ஓடுதேன்னு அதுக்கு மாத்தும்னா அதுல 'நீங்க இந்த பாலை வனத்துல உயிர் பிழைக்கனும்னா எது கெடச்சாலும் சாப்பிடனும்.. இந்த பாம்ப அப்படியே பச்சையா சாப்பிடலாம்'னு ஒரு பாம்ப பச்சையா சப்டுவான். அத பாத்த வடிவேல் சொல்லறது தான் ஞாபகம் வரும் 'நாங்க ஏன்டா நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்?'.


இல்லேன்னா destroyed  in seconds அப்படின்னு ஒரு விமானம் வெடிக்கரதயோ, ஒரு ஆளு தலை குப்புற விழுந்து ரத்தம் கொட்ட்ரதயோ, ஒரு பெட்ரோல் கிடங்கு வெடிச்சு செதர்ரதயோ காட்டுவாங்க. பத்து மணிக்கு தான் இந்த பிரச்சினை ஒரு எட்டரை ஒம்போது மணிக்கு எதாவது உருபடிய போட்ரங்கலான்னு பாத்தா இல்லை. எல்லா சேனல்லையும் ஒன்னா பாட்டு போட்டி நடக்குது இல்லன்னா குத்தாட்ட போட்டி நடக்குது. அதுவும் சமீபத்துல நான் பார்குறப்போ நேத்து ராத்திரி எம்மான்னு ஒரு பய்யன் பாடிட்டு இருக்கான் அடுத்த சேனல்ல வாவ் உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க்கவுட் ஆகுதுன்னு ஒரு நடுவர் ஆண்ட்டி சொல்லுது.


சரி அதுக்கும் முன்னாடி டிவில வேற என்ன ஓடுதுன்னா சீரியல். சில நாள் மதியம் சாப்பிட வீட்டுக்கு போவேன் அப்போ ஒரு சீரியல் ஓடிட்டு இருக்கும் அதே சீரியல அடுத்த மாசம் மத்யானம் பாத்தாலும் புரியும். காலைல பதினொரு மணியில இருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் சீரியல் போடறாங்க எல்லா சீரியளோட மய்யக் கதையும் சொத்து தகராறு, மாமியார் மருமக சண்டை, கள்ளக் காதல், பழிக்குப் பழின்னு செம்ம சீரியஸ்சா போயிட்டு இருக்கும். அதுவும் இடி இடிக்கற மாறி ஒரு மியூசிக் டமார் டமார்னு ஒரு மியூசிக்குன்னு ஒரே கொடூர சத்தங்களா இருக்கும். அத பாக்குரவங்களுக்கு கண்டிப்பா ரத்த கொதிப்பு வந்துடும். அட கார்டூன் சேனலாவது பார்க்கலாம்னா அதுலயும் சண்டை காட்சிகள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட ஒன்ன ஓட்டிட்டு இருகாங்க இதுக்கு சீரியலே தேவல. நீயா நானான்னு ஒரே ஒரு நல்ல ப்ரோக்ராம் இருந்துச்சு அதுவும் வர வர மொக்கை ஆகுது.

எப்பவுமே நாம தூங்க போகும்போது மனசு லேசா இருக்கணும் அப்ப தான் தூங்கி எந்திரிக்கும் போது மனசுல புத்துணர்ச்சி பொங்கும் அன்னைக்கு பொழுதும் நல்ல படியா போகும். மனசுல ஏகப்பட்ட விசயத்த போட்டு ஓலப்பீட்டு தூங்க போனா கெட்ட கெட்ட கனவா வரும், நிம்மதியா தூங்க முடியாது, அப்படியே நாம தூங்கி எந்திரிச்சாலும் மனசு பாரமா இருக்கும் நமக்கே தெரியாம ஒரு பய உணர்ச்சி மனசுல இருந்துட்டே இருக்கும். அதனால தூங்க போரக்கு முன்னாடி தயவு செஞ்சு இந்த வெட்டி டிவி-கல பாக்காம போயி தூங்குங்க. முடிஞ்சா ஒரு நல்ல ஆக்க சக்திய என்னத்த குடுக்கற மாறி புத்தகம் எதாவது படிங்க இல்லன்ன வீட்ல குழந்தைகளோ வயசானவங்களோ 
இருந்தா அவங்க கிட்ட மனசு விட்டு பேசுங்க கண்டிப்பா உங்க மனசும் லேசாகும்.



ஏன்டா ஒரு மனுஷன் டிவி பார்குறதே இருக்கற பிரச்சனைய மறந்து கொஞ்சம் பொழுத நல்ல படியா போக்குறதுக்கு தான். நீங்க போடற ப்ரோகிராம பாத்தா சந்தோசமா இருக்கரவன் கடுப்பு ஆகிடுவான், சும்மா இருக்கறவனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிடும். இந்த கொடுமைக்கு தான் டிவி பார்க்குறது விட்டுட்டு blog படிக்கவும் எழுதவும் ஆரம்பிச்சிட்டேன்! இப்ப சொல்லுங்க மக்களே "எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?".

4 comments:

Philosophy Prabhakaran said...

சார் SUN GROUP OF CHANNELS மட்டும் தான் பாப்பீங்களோ... ஜெயா மேக்ஸ் முயற்சி பண்ணி பாருங்க... ரம்மியான பழைய பாடல்களை ஒளிபரப்புவார்கள்...

சர்பத் said...

ஜெயா மேக்ஸ்...எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா!

சர்பத் said...

@ SUN GROUP OF CHANNELS மட்டும் தான் பாப்பீங்களோ...

அதுதானே தமிழனின் தலைவிதி!!!

டக்கால்டி said...

அருமை அருமை அருமை...
இந்த பழக்கம் கூட ஒரு சிரிப்பு நிகழ்ச்சின்னு அவனுங்களே சொல்லிக்கிற ஒரு ப்ரோக்ராம் ல இருந்து தொத்திகிச்சு...(நன்றி நன்றி நன்றின்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி தான் இந்த அருமை அருமை அருமையும் )

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...