நாம் அனைவரும் இயற்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இந்த உலகம் அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள், மலைகள், கடல், எரிமலைகள் அனைத்தும் இயற்கைக்குள் அடக்கம். மனிதர்களாகிய நாம் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கினோம். தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும் நீரையும் மாசு படுத்தினோம்.
காலம் தவறி மழை பெய்கிறது, அளவுக்கு மீறி வெயில் அடிக்கிறது, பருவ நிலை மாற்றம், குளோபல் வார்மிங் என்று ஏதோதோ சொல்கிறோம். மரங்களை வளர்ப்போம், மாசுக்களை குறைப்போம், இயற்கையை காப்போம் என்று கிளம்பிவிட்டோம் ஒன்றை மறந்து விட்டோம். இயற்கையை நாம் காப்பதில்லை இயற்கை தான் நம்மை காத்துக்கொண்டிருக்கிறது.
சற்று யோசித்து பாருங்கள் கோடை வெய்யிலுக்கு மின் விசிறி, குளிர் சாதன பெட்டி, இளநீர், சர்பத் என்று சூட்டை தணிக்க பல விசயங்களை செய்கிறோம். ஆனால் இயற்கை நினைத்தால் மதிய மொட்டை வெயிலை கூட ஐந்தே நிமிடங்களில் மழை பொழிவின் மூலம் குளிர வைத்து விடும். மனிதன் ஏற்படுத்திய அனைத்து மாசுக்களையும் இயற்கை நினைத்தால் குறுகிய காலத்திற்குள் அகற்ற முடியும். இயற்கையின் சக்தி மனிதனின் அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
நாம் வாழும் இந்த உலகம் இயற்கையின் ஒரு சிறிய துகள் மட்டுமே. நாம் மைக்ரோஸ்கோப்பின் வழியே மட்டுமே காண முடியும் நுன்னுயிர் எவ்வளவு சிறியதோ, அதை விட இயற்கையின் முன் பன்மடங்கு சிறியது நாம் வாழும் இந்த பூமி. கீழே உள்ள படத்தில் படம்[1] சூரியன், பூமி, வியாழன் மற்றும் சில கிரகங்களை ஒப்பிட்டு காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது பூமி. படம்[2] பால்வெளியை காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது சூரியன், அதில் பூமி தெரிவது கடினம் துகளோடு துகளாக போயிருக்கும்.
இந்த இரண்டு வீடியோக்களையும் முழுமையாக பாருங்கள் உண்மையில் நாம் வாழும் உலகம் எவ்வளவு சிறியதென்று உங்களுக்கு தெளிவாய் புரியும்.
நீங்கள் பார்த்த இந்த விடியோக்கள் மனித அறிவிற்கு தெரிந்த அளவுதான், இயற்கை இதையும் தாண்டி அளப்பரிய சக்தி வாய்ந்தது, கணக்கில் அடங்காதது. மனிதன் தன் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை கடவுள் என்றான், என்னை பொறுத்த வரை அந்த சக்தி இயற்கை. நாம் ஒப்புகொண்டாலும் மறுத்தாலும் நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளும், நிகழ்வுகளும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது.
அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான இந்த பூமியை மனிதன் ஆள்கிறான். விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். சிட்டுக்குருவிகளை செல்போன் டவர் வைத்து சிதைக்கிறான், விலங்குகளின் வாழ்வாதரமான காடுகளுக்குள் குடிபுகுந்து, யானைகளையும், சிறுத்தைகளையும் குறை கூறுகிறான். தனக்கு சொந்தம் இல்லாத இந்த பூமியை கூறு போட்டு விற்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய் நிலவிலும், மற்ற கிரகங்களிலும் கூட இடத்தை விற்க ஆரம்பித்து விட்டான்: Moon Estates.
மனிதர்களுக்குள் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள், சண்டை சச்சரவுகள். எதற்காக பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்றே தெரியாமல் பல சந்ததிகள் வந்து சென்றாகிவிட்டது. இவ்வுலகம் மிகச்சிறியது நாம் வாழும் இவ்வாழ்க்கை மிக மிக சிறியது. முடிந்த வரை இயற்கைய நேசிப்போம், மற்ற ஜீவராசிகளையும் நேசிப்போம் அதற்கு முன் நம் சக மனித்ர்களை நேசிப்போம்!
Tweet

5 comments:
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
அபூர்வம்மான தகவல்களுடன் வீடியோ
நன்றி
இன்றிய உலகுக்கு அவசியமான கருத்துக்கள் . பதிவுக்கு நன்றி
@THOPPITHOPPI
@பிச்சைக்காரன்
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி
@philosophy prabhakaran
தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.
தற்சமயம் அது இயலாது... இன்னுமொரு சந்தர்பத்தில் முயற்சிக்கிறேன்
Post a Comment