என்னத்த சொல்ல?

மக்கள் வரிப்பணத்தை 
பங்குபோடும் அரசியல்வியாதிகள் 
தெரிந்தும் ஓட்டுப் போடும் 
புரிந்துகொள்ள முடியாத மக்கள்!

கல்வியை காசாக்கும்
தொழிற்சாலைக் (கல்வி?)கூடங்கள்
வேறு பள்ளிகளே இல்லாததுபோல்
வரிசை கட்டி நிற்கும் பெற்றோர்கள் !

நோயை பேய்போலாக்கி 
பணம்பறிக்கும் மருத்துவர்கள்
உயிர் பயம் உள்ளுக்குள் உறுத்த 
பிதுங்கி நிற்கும் நோயாளிகள்!

செய்வதறியாது திணறிப்போய் 
உதவி என்று நம்பி சென்றால் 
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லுப்போடும் காவலர்கள்!

சொல்லிக்கொண்டே போகலாம்
கேட்கும் திராணியிருந்தால்
எவ்வளவு பட்டாலும் திருந்தாத நாடு 
நான் சொல்லியா விடியப் போகிறது?

7 comments:

Ravi kumar Karunanithi said...

VADAI enakkey

pichaikaaran said...

நான் சொல்லியா விடியப் போகிறது?"

நாம் எல்லாம் சேர்ந்துதானே நாடு

Philosophy Prabhakaran said...

சூப்பர்... கவிதை கூட எழுதுவீர்களா... கடைசி வரி டச்சிங்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html
நன்றி!

arasan said...

நல்லா இருக்குங்க//

சர்பத் said...

வந்தமைக்கும் மறுமொழி இட்டமைக்கும் அனைவருக்கும் நன்றி :)

அன்புடன் நான் said...

என்னத்த.... சொல்ல???

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...